Search
Close this search box.

அமெரிக்கா உருவாக்கிவரும் இரகசிய அணி! மீண்டும் நெருக்கடியாகும் உலக ஒழுங்குகள்

மத்தியகிழக்கில் ‘நேட்டோ’ போன்றதான ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அண்மைக்காலமாக அமெரிக்கா ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரானுக்கு எதிராக பலமான ஒரு அணியை உருவாக்கும் முயற்சி. அந்த அணியில் இருக்கும் ஒரு நாட்டின் மீது ஈரானோ அல்லது ஈரான் சார்பு துணை இராணுவக் குழுக்களோ தாக்குதல் மேற்கொண்டால், அந்த அணியில் நிற்கும் நாடுகள் அமெரிக்காவின் துணை கொண்டு பதில் தாக்குதல் மேற்கொள்ளும்

அரசாங்கம் வழங்கிய இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்…

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசியில் சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவருக்கு வழங்கப்பட்ட அரிசியில் ஒரு பகுதி கோழிகளுக்கு வழங்கப்பட்டது. அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – வரலாற்றில் முதன்முறையாக ஓய்வூதிய முறை..!

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சும் சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. புதிய கூட்டணியின் களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சமுர்த்தி வங்கியின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் வழங்கும் முதலாவது வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற, சிறைச்சாலைப் பேருந்து, விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்றையதினம் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது, நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால், பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தினை அடுத்து, சிறைச்சாலைப் பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா முதலில் எந்த தேர்தல்?: அரசியல் அரங்கில் மீண்டும் குழப்பம்..

முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு பசில் ராஜபச்க தலைமையிலான பொதுஜன பெரமுன பாரிய முயற்சியை முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் “முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் என்ற கருத்துக்கள் அரசாங்கத்தின் நலன் கருதியே இடம்பெறுகின்றன.இந்த கருத்துக்கள் மொட்டுக் கட்சியின் தேவை கருதி முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ளன. முதலில் நாடாளுமன்ற தேர்தலை நடாத்தி சில நாடாளுமன்ற உறுப்பினர்களையேனும் பாதுகாக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடாத்தப்படுமாயின் நிலையற்ற அரசாங்கமே தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார். “கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே இம்முறை பொதுஜன பெரமுனவிற்கும் ஏற்படும். அதனை தடுப்பதற்காகவே ஐனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நாடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்” எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும். இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு உட்பட்டது. அதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. என்றாலும், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடாத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பொதுஜன பெரமுனவும் முதலில் பொதுத் தேர்தல் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இதேவேளை,மாகாண சபைத் தேர்தலுக்கு திகதி குறித்த பின்னரும் தேர்தல் நடைபெறவில்லை. இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் தேர்தல் நடைபெறாமல் போகலாம் என்று பலரும் கருதும் நிலை உருவாகியுள்ளது. இலங்கைத் தீவில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா என்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழர்களை சீண்ட வேண்டாம்..! அரசுக்கு செல்வம் எம்.பி. எச்சரிக்கை!!

தமிழர்கள் மறைந்த தமது உறவுகளை நினைவேந்தும் நிகழ்வையும் கூட, இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் மூலம் தடுப்பதற்குக் களம் இறங்கியமை மூலம் தேசிய நல்லிணக்கத்துக்கான கடைசி வாய்ப்பையும் இறுக மூடி இருக்கின்றது. இலங்கை ஆட்சிப் பீடம் இது பெரும் துரதிஷ்டவசமானதாகும் என ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட முடியாத அடிப்படை உரிமையாகும். சர்வதேசத் தரப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவையிலேயே திரும்பத்திரும்ப இதனை வலியுறுத்தி வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட, தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு, ‘மக்கள் தமது உறவுகளை நினைவுகூர உரிமை உண்டு. அது மறுக்கப்பட முடியாது’ என்று கூறினார். இருப்பினும், அவையெல்லாம் பேச்சளவில் தான் இருக்கின்றன. அவரின் பொலிஸ் கட்டமைப்பு அதற்கு எதிராக மிக முரட்டுத்தனமாக தமிழ் மக்களின் ஆன்மாவையே சீண்டிப் பார்க்கும் விதமாக அடக்குமுறைத் திமிருடன் இப்படி நடந்து கொள்கின்றது. இன்னொரு கோட்டாபய ராஜபக்சவின் அராஜக ஆட்சியையே இந்தச் செயற்பாடு மூலம் ரணில் விக்ரமசிங்கவும் இங்கு நிலைநிறுத்த முயலுகின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது என தெரிவித்துள்ளார்.

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது. சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மின்சாரக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற முடிவு!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது. விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. 3 நாட்களாக நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்து நீதிபதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடுவெல மாவட்ட நீதிமன்றம்  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகிய இருவரினால் கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே கடுவெல மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, காலை 10 மணியளவில் யாழ். பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.