ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகிய இருவரினால் கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே கடுவெல மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.