Search
Close this search box.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்க அணி!

2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இந்த தகுதியை பெற்றுள்ளது. Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றது. அந்த அணி சார்பில் அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில்  தென்னாபிரிக்க அணி சார்பில் Marco Jansen மற்றும் Tabraiz Shamsi தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Reeza Hendricks 29 ஓட்டங்களையும், அணித் தலைவர் Aiden Markram 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான்  அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Rishabh Pant 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Naseem Shah மற்றும் Haris Rauf ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி 120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Rizwan அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா!

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று (06) இரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் 44 ஓட்டங்களையும், ஷதாப் கான் 40 ஓட்டங்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ஓட்டங்களையும் விளாசினார். இதை அடுத்து 160 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்க அணியின் தொடக்க வீரரும், அணி தலைவருமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ஓட்டங்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ஓட்டங்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய அமெரிக்க 1 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களை பெற்றது. 19 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்க அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ரி20 உலகக் கிண்ண தொடரின் 2 ஆவது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

78 என்ற இலக்கை போராடி வென்ற தென்னாபிரிக்கா!

2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும் மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் என்ரிச் நோர்ட்ஜே அதிகப்படியாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நெதர்லாந்திடம் இலங்கை அணி தோல்வி!

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல்  பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி நெதர்லாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி களம் இறங்கிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பந்து வீச்சில் தில்ஷான் மதுஷங்க 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கைக்கு போட்டி உள்ளதால், இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் பந்து வீசவில்லை. இந்நிலையில், 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 18 ஓவர்கள் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தசுன் ஷனக 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் மே 31ம் திகதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.

ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது. 17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் இன்று இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Pat Cummins 24 ஓட்டங்களையும் Aiden Markram 20 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் Andre Russell 03 விக்கெட்டுக்களையும் Mitchell Starc மற்றும் Harshit Rana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்நிலையில், 114 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Venkatesh Iyer ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஐபிஎல் இறுதிப் போட்டி: கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும். இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்திருந்தது. இரு அணிகளும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சமபலத்துடன் இருப்பதால் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் மிகவும் தீவிரம் காட்டியுள்ளன. இதுவரையில் கொல்கத்தா அணி இரண்டு முறையும் (2012 மற்றும் 2014) சன்ரைசர்ஸ் அணி ஒரு முறையும் (2016) ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த இரு அணிகளும் இறுதி லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது. அந்த தோல்விக்கு சன்ரைசர்ஸ் அணி இன்று பதிலடி கொடுக்கும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். இதனிடையே சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2012 ஆம் ஆண்டு முதல் பட்டத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி!

நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது. 2024 ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Trent Boult மற்றும் Avesh Khan ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதன்படி, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Shahbaz Ahmed மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 36 ஓட்டங்களால் வீழ்த்தி ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கு கல்கத்தா அணி தகுதி!

2024 ஐபில் போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு  கல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ராஹுல் திரிபதி அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர். இதன்படி, 2024 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலிடத்திற்கு முன்னேறிய வனிந்து!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதன்படி, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன் அவர் இந்த முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.