Search
Close this search box.

இலங்கையின் உணவுப்பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

கொழும்பு (colombo) நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில்,, கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் (Food inflation) ஜுனில் 1.4 சதவீதமாகவும், மே மாதம் 1.3 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஜுனில் 1.8 சதவீதமாகவும் உயர்வடைந்தன. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது. மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஜுனில் 0.77 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மே மாதத்தில் பதிவான 3.5 சதவீதத்திலிருந்து ஜுன் மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(30)  வீழ்ச்சியடைந்துள்ளது. அதனடிப்படையில், செலான் வங்கியில்-  அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.15 முதல் ரூ. 295.25 மற்றும் ரூ.303.65 முதல் ரூ. முறையே 304.75. மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 295.13 முதல் ரூ. 296.16 மற்றும் ரூ. 305.12 முதல் ரூ. முறையே 306.18. கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 293.58 முதல் ரூ. 295.34, விற்பனை விலையும் ரூ. 304.50 முதல் ரூ. 305.50. சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 296 முதல் ரூ. 297 மற்றும் ரூ. 305 முதல் ரூ. முறையே 306 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்ந்தது இலங்கை ரூபாயின் மதிப்பு – பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவும் குறையும்! அமைச்சர் அறிவிப்பு

ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சுமார் 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரூபாய் மதிப்பு உயர்வால் பணவீக்கம் குறையும், ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவும் குறையும், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது எளிதாகும் என்றார். இது உலகளவில் நாட்டின் நிதி பலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாடு!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்காமல் பராமரிக்க தீர்மானித்தள்ளதாக தெரிவித்தார். “ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது முக்கியமான முடிவு. அந்நியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த முக்கிய அறிவிப்பு!

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம்  மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்கள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 9.50 சதவீதமாக பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(25) சற்று சரிவை  சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 293.75 மற்றும் ரூ. முறையே 303.25. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 294.24 முதல் ரூ. 294.59 மற்றும் ரூ. 304.20 முதல் ரூ. முறையே 304.56. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.33 முதல் ரூ. 293.58 மற்றும் ரூ. 303.50 முதல் ரூ. முறையே 303.75. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 295 முதல் ரூ. 295.50 மற்றும் ரூ. 304 முதல் ரூ. முறையே 304.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன் – அரசாங்கம் அறிவிப்பு!

எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கைத்தொழில் அமைச்சின் செயலாளர்  சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரலில் நாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் கடந்த மாதத்தில் 42 வீதமாக பதிவாகியுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் புதிய முன்பதிவு, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் மொத்த கொள்முதல் குறியீடுகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக ஒட்டுமொத்த சுட்டெண் வீழ்ச்சியடைந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டமையே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் எனவும், நீண்ட விடுமுறை காரணமாக விநியோகஸ்தர்கள் முன்பதிவை வழங்குவதற்கு எடுத்துக்கொண்ட நேரம் முன்னையதை விட ஏப்ரலில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைத் துறையில், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் 56.7 வீத மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் மூலம், நிதிச் சேவைகள் துணைத் துறையின் வணிக நடவடிக்கைகள் மேலும் வளர்ச்சியடைந்துள்ளதுடன், பண்டிகைக் காலத்தின் தேவைக்கு மத்தியில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக உப பிரிவின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சொத்து விற்பனை ஆகிய துணைத் துறைகளும் ஏப்ரல் மாதத்தில் சாதகமான முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளன. எவ்வாறாயினும், மார்ச்ச மாதத்துடன் ஒப்பிடும் போது  ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததிற்கு அமைய தங்குமிடம் மற்றும் உணவு விநியோக சேவையின் உப பிரிவானது சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம்…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம்(13) , செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 292.50 மற்றும் ரூ. முறையே 302. மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 293.21 முதல் ரூ. 293.60 மற்றும் ரூ. 303.14 முதல் ரூ. முறையே 303.55. கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 292.23 முதல் ரூ. 292.73 மற்றும் விற்பனை விலை ரூ. 302.50 முதல் ரூ. 303. சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 294 முதல் ரூ. 294.50 மற்றும் ரூ. 303 முதல் ரூ. முறையே 303.50 ஆக பதிவாகியுள்ளது.  

நாட்டுமக்களுக்கு விடுக்கபட்ட முக்கிய அறிவித்தல்.

நாட்டில் கிறிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். கிறிப்டோ நாணயம் இலங்கையில் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசயம கிறிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த சிலர் நட்டமடைந்துள்ளதாகவும் இவ்வாறான முதலீடுகளின் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் கிறிப்டோ நாணய அலகினை பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.