Search
Close this search box.

ரி 20 உலகக் கிண்ணத்தை நிட்சயம் வெல்வோம்!

மக்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். ரி 20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (14) இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எமது அணி நன்றாக பயிற்சி செய்து இருக்கிறது. ஒரு நல்ல போட்டிக்கு செல்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை நிட்சயம் நிறைவேற்ற முயற்சி செய்வோம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் நடைபெற்ற போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக கலந்து கொண்டார்கள். அணிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது. சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்களின் நல்ல ஒற்றுமை உள்ளது. இம்முறை மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.”

இலங்கைக்காக தங்கம் வென்ற காலிங்க!

11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டி ஜப்பானில்  நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார். இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் ஆகும். இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.

ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் எண்டர்சன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் எண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2003 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான எண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார். தனது முகநூல் கணக்கில் பிரியாவிடை குறிப்பில், தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என எண்டர்சன் கூறியுள்ளார். 41 வயதான எண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்க முடியும். ஜேம்ஸ் எண்டர்சன் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துப்படுத்தி 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19, இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்த ஈழத் தமிழனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று பிரான்ஸ் அதிபரின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா என்பவரே ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார். நேற்று (2024.05.09) மார்செய் நகருக்கு சென்றடையும் தீப்பந்தத்தை பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சல் ஓட்டமுறையில் மாறிமாறிச் சுமந்து செல்லவுள்ளனர். பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பரிஸ் ஒலிம்பிக் சுடரை (Olympic torch) ஏந்தவுள்ளார். ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு; மேலதிக வீரர்கள் பட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த்..

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணி இன்று (09) அறிவிக்கப்பட்டது. எதிர்வரும்  ஜூன் 1 முதல் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் பெயர் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ளது. அணித்தலைவராக வனிந்து ஹசரங்கவும் துணை தலைவராக சரித் அசலங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குசால் மெண்டிஸ், பெத்தும் நிஷங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்‌ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண, நுவன் துஷாரா, தில்ஷான் மதுஷங்க ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஸ, ஜனித் லியனகே ஆகியோர் மேலதிக வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.

வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரரும் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கு மாகாணத்திலிருந்து தனது கிரிக்கெட் பயிற்சியை பெற்ற இவர் இலங்கைக்கு பெருமிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், யாழ். மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பல்வேறுபட்ட சமூக சீர்கேடான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் இளைய தலைமுறையினருக்கு, விளையாட்டின் மூலம் சாதனை படைக்கும் 22 வயதேயான வியாஸ்காந்த் ஒரு சிறந்த முன்னுதாரணமாவர். இவரை முன்மாதிரியாகக் கொண்டு எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கற்றல் மூலம் மட்டுமல்ல விளையாட்டின் மூலமும் உயரங்களை எட்ட முடியும் என்பதை உணர்த்தியுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன் என்றுள்ளது.

சித்திரை வருடப் பிறப்பு எப்போது..? இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் விளக்கம்..!!

இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது தெளிவாக கூறியுள்ளார்

“லவ் டுடே” திரைப்பட நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அறிவிப்பு..!! காத்திருக்கும் ரசிகர்கள்..!

‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன், இப்போது ‘ஓ மை கடவுளே’ இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்தைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை வெளியிட இயக்குனர் அஸ்வத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு காணொளியொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.10 வருடங்களுக்கு முன் தொடங்கிய நட்பை காட்டும் விதமாக தான் இப்படி ஒரு வீடியோவை இப்போது எடுத்ததாகவும், விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.    

எக்ஸ்(ட்விட்டர்) பயணளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!!

எக்ஸ் செயலியில் கட்டண முறையில் வழங்கப்படும் எக்ஸ் பிரீமியம் கட்டண முறை பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்க உள்ளதாக‌ எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவிட்ட பதிவின் படி, “2500 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட அனைத்து எக்ஸ் கணக்குகளுக்கும் இலவசமாக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும். அத்துடன் 5000 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட கணக்குகளுக்கு பிரீமியம் பிளஸ் இலவசமாகப் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரச மரத்தை வேரோடு பிடுங்கிய போது நடந்த அதிசயம்..!! ஆச்சரியத்தில் மக்கள்..!

தமிழ்நாட்டில் ஒரு சாலையில் அரச மரம் வேரோடு பிடுங்கப்பட்டபோது, ​​அதன் அடியில் ஒரு பழமையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.இச் சம்பவம் ஒரு ஆச்சரியமானதாகவே பார்க்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, குறித்த இடத்தில் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், 12 அடி அகலமுள்ள அரசமரத்தை அதிகாரிகள் வெட்டியபோது, ​​மரத்தின் அடியில் ஒரு பழமையான கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 40 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.இந்த கிணற்றின் ஓரம் வளர்ந்த அரச மரம், கிணற்றையே மூடிவிட்டது என்பது தெரிந்தது.இதற்கமைய கிணற்றில் தற்போது தண்ணீர் இருப்பதால் பலரும் கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.