2024 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் முதல் போட்டியுடன் ஆரம்பமான ஐபிஎல் தொடர் இன்றிரவு சென்னையில் இடம்பெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வரும்.
இறுதிப் போட்டியின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்திருந்தது.
இரு அணிகளும் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சமபலத்துடன் இருப்பதால் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் மிகவும் தீவிரம் காட்டியுள்ளன.
இதுவரையில் கொல்கத்தா அணி இரண்டு முறையும் (2012 மற்றும் 2014) சன்ரைசர்ஸ் அணி ஒரு முறையும் (2016) ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த இரு அணிகளும் இறுதி லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இதில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.
அந்த தோல்விக்கு சன்ரைசர்ஸ் அணி இன்று பதிலடி கொடுக்கும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.
இதனிடையே சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2012 ஆம் ஆண்டு முதல் பட்டத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.