2024 ஐபில் போட்டித் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் ராஹுல் திரிபதி அதிகபட்சமாக 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, 2024 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.