Search
Close this search box.

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளினால் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக தமிழ் மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் 46வது நாளாக இப் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகன்..

போதைப்பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆந் திகதி பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சட்ட நடவடிக்கைக்கமைய 07 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை(24) விசாரணைககு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அப்துல் கையூம் பிசால் அகமட் (வயது-24) என்ற சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்ததுடன் அவற்றை உபயோகித்தும் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் கைதாகி உள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்காக புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சை பெற்றிருந்தார். அத்துடன் சந்தேக நபரின் தந்தையார் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். இன் கட்டுப்பாட்டாளராகவும் அம்பாறை மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். மேலும் குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை 17 ஆந் திகதி கைது செய்யப்பட்டு பெரிய நீலாவணை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை வருடப் பிறப்பு எப்போது..? இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் விளக்கம்..!!

இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது தெளிவாக கூறியுள்ளார்

“லவ் டுடே” திரைப்பட நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அறிவிப்பு..!! காத்திருக்கும் ரசிகர்கள்..!

‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன், இப்போது ‘ஓ மை கடவுளே’ இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்தைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை வெளியிட இயக்குனர் அஸ்வத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு காணொளியொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.10 வருடங்களுக்கு முன் தொடங்கிய நட்பை காட்டும் விதமாக தான் இப்படி ஒரு வீடியோவை இப்போது எடுத்ததாகவும், விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.    

எக்ஸ்(ட்விட்டர்) பயணளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..!!

எக்ஸ் செயலியில் கட்டண முறையில் வழங்கப்படும் எக்ஸ் பிரீமியம் கட்டண முறை பயனர்களுக்கு இலவசமாகக் கிடைக்க உள்ளதாக‌ எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவிட்ட பதிவின் படி, “2500 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட அனைத்து எக்ஸ் கணக்குகளுக்கும் இலவசமாக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும். அத்துடன் 5000 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட கணக்குகளுக்கு பிரீமியம் பிளஸ் இலவசமாகப் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரச மரத்தை வேரோடு பிடுங்கிய போது நடந்த அதிசயம்..!! ஆச்சரியத்தில் மக்கள்..!

தமிழ்நாட்டில் ஒரு சாலையில் அரச மரம் வேரோடு பிடுங்கப்பட்டபோது, ​​அதன் அடியில் ஒரு பழமையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.இச் சம்பவம் ஒரு ஆச்சரியமானதாகவே பார்க்கப்படுகிறது.இது குறித்து மேலும் தெரியவருகையில் அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, குறித்த இடத்தில் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், 12 அடி அகலமுள்ள அரசமரத்தை அதிகாரிகள் வெட்டியபோது, ​​மரத்தின் அடியில் ஒரு பழமையான கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 40 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.இந்த கிணற்றின் ஓரம் வளர்ந்த அரச மரம், கிணற்றையே மூடிவிட்டது என்பது தெரிந்தது.இதற்கமைய கிணற்றில் தற்போது தண்ணீர் இருப்பதால் பலரும் கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.    

இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பிரகாசித்த 14 வயது இலங்கை சிறுமி..!!

இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை இளம் மகளிர் அணியின் 14 வயதான சமோதி பிரபோதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (09.04.2024) குறித்த போட்டியானது நடை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில், சிறப்பாக செயற்பட்ட சமோதி பிரபோதா 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளம் மகளிர் அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.அதற்கமைய, இலங்கை இளம் மகளிர் அணி 108 ஓட்டங்களால் போட்டியை கைப்பற்றியுள்ளது.    

உலக ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணப்பரிசு வழங்க தீர்மானம்..!!

எதிர் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள போட்டிகளில் முதலிடம் பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை வழங்கிவைப்பதற்கு உலக தடகள சம்மேளனம் தீர்மானித்துள்ளது.உலக தடகள சம்மேளனம் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் விளையாட்டு சம்மேளனம் என்ற பெருமையை பெறுகின்றது. 2024-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.தங்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை இலங்கை நாணயத்தில் சுமார் 15,000,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.மேலும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கும் 2028 முதல் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மலையக மரக்கறிகளில் ஏற்படும் வீழ்ச்சி..!! மலையக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்..!

நுவரெலியா மாவட்டத்தில் மலையக மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதால் தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட சிறு மலையக மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது மலையகத்தில் அனைத்து மரக்கறிகளின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் 170 ரூபாவாகவும், கரட் ஒரு கிலோ 270 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 170 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 260 ரூபாவாகவும், ஒரு கிலோவாகும். சோளம் 70 ரூபாவாகவும், பீட்ரூட் கிலோ 120 ரூபாவாகவும், கீரை கிலோ 70 ரூபாவாகவும், நேற்று (09) ஒரு கிலோ மிளகாய் மொத்த விலையில் 400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்தில் சிறு காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளும் மலையகத்தில் பாரிய தோட்டங்களில் சிறு காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளும் இந்த நிலைமையை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.புத்தாண்டு காலத்திலும் காய்கறிகளின் விலை உயரும் என எதிர்பார்த்து, வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்து, பல்வேறு கடன்களை வாங்கி பயிர்கள் செய்த நிலையில், இந்த ஆண்டு, மலையக காய்கறிகளின் விலை, எதிர்பாராதவிதமாக சரிந்ததுள்ளது என மரக்கறி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!!

தீவிரவாத தாக்குதல்களும், பயங்கரவாதத் தாக்குதல்களும் உலகளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாட்டில் பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ஏனைய பண்டிகைகளின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம். ஈஸ்டர் தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும், ஏனைய சம்பவங்கள் நிகழலாம்.தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தார்.