Search
Close this search box.
கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளினால் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக தமிழ் மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக
அடக்குமுறைகளையும் கண்டித்தும் 46வது நாளாக இப் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News