‘லவ் டுடே’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன், இப்போது ‘ஓ மை கடவுளே’ இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்தைகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை வெளியிட இயக்குனர் அஸ்வத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு காணொளியொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.10 வருடங்களுக்கு முன் தொடங்கிய நட்பை காட்டும் விதமாக தான் இப்படி ஒரு வீடியோவை இப்போது எடுத்ததாகவும், விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.