தீவிரவாத தாக்குதல்களும், பயங்கரவாதத் தாக்குதல்களும் உலகளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்கின்றன. இது விழிப்புணர்வின் அவசியத்தை காட்டுவதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நாட்டில் பொது அமைதியின்மையை தூண்டும் வகையில் அரசியல், மத மற்றும் கலாசார அம்சங்களின் மீது தாக்குதல் நடத்த சிலர் முயற்சிப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ஏனைய பண்டிகைகளின் போது பாதுகாப்பிற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.பாதுகாப்பு நிலைமைகள் விரைவாக மாறலாம். ஈஸ்டர் தாக்குதல் அளவில் இல்லாவிட்டாலும், ஏனைய சம்பவங்கள் நிகழலாம்.தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தார்.