இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இலங்கை இளம் மகளிர் அணியின் 14 வயதான சமோதி பிரபோதா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (09.04.2024) குறித்த போட்டியானது நடை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில், சிறப்பாக செயற்பட்ட சமோதி பிரபோதா 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளம் மகளிர் அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.அதற்கமைய, இலங்கை இளம் மகளிர் அணி 108 ஓட்டங்களால் போட்டியை கைப்பற்றியுள்ளது.