Search
Close this search box.

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா..? கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு..

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு, சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடாத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார்: பேச்சுவார்த்தை நடத்த கொழும்பு வருமாறு அழைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிப்பு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் அர்ச்சுனா தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளதுடன், அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவரை வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போராட்டகாரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, தான் தங்கியிருக்கும் வைத்தியர் விடுதியில் குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் இரத்ததானம்…

இந்திய அணியின் முன்னால் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனியின் பிறந்ததினம் யாழ்ப்பாணம் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் வழமை போன்று சிறப்பாக நடைபெற்றது. யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கியதுடன் கைதடி நவீல்ட் சிறுவர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். டோணி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் இவர்களின் சமுக பணிகள் 8 வருடங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படுகின்றது.  

வவுனியாவில் மாட்டை கடத்திச் சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு: பொலிசாரிடம் ஒப்படைப்பு..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்த அப் பகுதி இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் இன்று )07.07) மாலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டி நின்ற மாட்டினை திருடிச் சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் அவர்களை கட்டி வைத்து நையப்புடைத்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்றுநேரம் முரண்பாடான நிலமை ஏற்பட்டிருந்தது. எனினும் குறித்த இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் பொதுமக்களிடத்தில் உறிதியளித்த நிலையில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த இருவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு வலியுறுத்தினார். வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் சற்று முன்னர் பதற்றம் – பலர் மீது துப்பாக்கி பிரயோகம்

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகர் கே. சுஜீவாத என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளப் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதில் புதிய சிக்கல்!

ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள  இலங்கை முன்னாள் படையினரை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ரஷ்ய படையில் இணைந்து கொண்ட ஒரு தொகுதி இலங்கையர்கள் ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா-உக்ரைன் போரில் சிக்கியுள்ள  இலங்கை முன்னாள் படையினரை மீட்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ரஷ்ய படையில் இணைந்து கொண்ட ஒரு தொகுதி இலங்கையர்கள் ரஷ்ய குடியுரிமை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ரஷ்ய பிரஜைகளை அந்நாட்டிலிருந்து  இலங்கை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியாது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் கடமையாற்றி வரும் சில இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் குடும்பத்தினருக்கு போதியளவு தெளிவு கிடையாது என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவில் போரில் இணைந்து கொண்டு உயிரிழந்த இலங்கையர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2024 புதிய பருவத்தில் உர மானியத் தொகையை விவசாயிகள் பெறவில்லை என்றால், அது குறித்து வட்டார வேளாண்மை சேவை மையம் அல்லது மாவட்டக் கல்லூரியில் விரைவில் விசாரிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உர மானிய பணத்தை திருடிய குழுவொன்று அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை விவசாயிகள் பொது சேவைகள் உதவி ஆணையாளர் புபுது சந்தருவன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு புதிய பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணம் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் ஹிருணிக்காவின் பரிதாப நிலை..

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஏனைய கைதிகளுடன் வழமை போன்று செயற்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனினும் இதுவரை பணி செய்யும் பிரிவிற்கு அனுப்புவதற்கு அவர் பரிந்துரைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.  

மலேசியா பாராளுமன்றத்திற்கு செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு!

மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலேசியா  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு. அங்குள்ள இந்தியா வம்சாவளி தமிழர்களுடன், மூவின மக்களும் ஒன்றாக வாழ தான் முன்னெடுத்த வழிமுறைகள் குறித்தும், தனது தலைமைத்துவ பண்புகள் மற்றும் தொடர் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாட கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, இன்று செந்தில் தொண்டமான் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த மூன்று வயது குழந்தை..!

மூன்று வயதுடைய  குழந்தையொன்று வீட்டின் நீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கு மீத்தெனிய பகுதியை சேர்ந்த 3 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிப்பாட்டுவதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் . பின்னர் அவரது  ஒன்பது வயது குழந்தையின் உடலைக் கழுவி வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் இருந்தி விட்டு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிலிருந்து  வெளியே வந்த தாய் மூன்று வயது குழந்தையை தேடிய போது  குழந்தை நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைக் அவதானித்துள்ளார். பின்னர் குழந்தை மீட்கப்பட்டு  மீத்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள்  தெரிவித்தனர் .