Search
Close this search box.
கொழும்பில் சற்று முன்னர் பதற்றம் – பலர் மீது துப்பாக்கி பிரயோகம்

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகர் கே. சுஜீவாத என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளப் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring

More News