மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மீத்தெனிய பகுதியை சேர்ந்த 3 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக மீத்தெனிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிப்பாட்டுவதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் .
பின்னர் அவரது ஒன்பது வயது குழந்தையின் உடலைக் கழுவி வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் இருந்தி விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் வீட்டிலிருந்து வெளியே வந்த தாய் மூன்று வயது குழந்தையை தேடிய போது குழந்தை நீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதைக் அவதானித்துள்ளார்.
பின்னர் குழந்தை மீட்கப்பட்டு மீத்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர் .