நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு, சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.