Search
Close this search box.

செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது. கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேயே இவ்வாறு கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளிடமிருந்த காணிகள் உரிமையாளர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்தன. முறையான உறுதிப்பத்திரங்கள் உள்ள உரிமையாளர்களுக்கு மீண்டும் அதனை வழங்கியிருந்தாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார். செஞ்சோலையிலுள்ள பிள்ளைகளின் நலன்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது. செஞ்சோலைக் காணிகளை உரிமையாளரிடம் கையளிப்பது சமூகம் சார்ந்த பிரச்சனை என தெரிவிக்கப்பட்ட போது அது உரிமை சார்ந்த விடயம் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மலையாளபுரம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் உறவுகளை இழந்த பிள்ளைகள் தற்போது கொட்டகை அமைத்து வாழந்து வருகின்றனர். இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாகவும் அதீத கவனம் செலுத்தப்பட்டிருந்தது. செஞ்சோலை காணி விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாகவும் ஆனால் அதற்குள் மலசலகூடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் குறிப்பிட்டார். ஆனால் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்டிருந்த ஏனயை காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ள நிலையில் செஞ்சோலைக் காணிகளையும் உரிமையாளரிடம் வழங்குவதே நியாயமானது என்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் குறிப்பிட்டார். எனினும் செஞ்சோலையில் வளர்ந்த பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலைமைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி(Kilinochchi) – வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று  (14.06.2024) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  “இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தார். இந்தியா (India) என்பது எமது பெரிய அண்ணன். எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியது அவசியம். இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விபரம் இன்னும் உறுதியாகவில்லை. ஓகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம். ஏனைய அயல் நாடுகளை விடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக் கொண்டுள்ளது.ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும். இலங்கையின் அடுத்த அதிபர் ரணில் (Ranil Wickremesinghe) தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” என்றார்.

பொதுவேட்பாளராகும் தகுதி எனக்கு உள்ளது : அனந்தி சசிதரன் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண்வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். அத்துடன், சிவில் அமைப்புக்கள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் வேட்பாளரை களமிக்குவதற்கே முனைப்பு காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மயமாக்கலுக்கு உதவும் இந்தியாவின் பா.ஜ.க

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகின்றபௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என்று கஜேந்திரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை. இந்தியா சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்குச் சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையைத் தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது . மேலும், இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்காக இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.” என்றார்.

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள் – செய்திகளின் தொகுப்பு

போர்க்குற்றம் புரிந்ததாகக் கண்டறியப்பட்ட இலங்கை இராணுவத்தின் (Sri Lankan Army) தளபதிகளுக்கு எதிராக சர்வதேச அதிகார வரம்பிற்குட்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பல நாடுகள் தற்போது இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கையின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால், வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்ட போதிலும், இராணுவத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய தேசியப் பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கை படை அதிகாரிகள் உலகின் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம் என்பதோடு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

குருநாகல் (Kurunagala) முஸ்லிம் மக்களினால் காசாவில் நடைபெற்று வரும் போரினை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க கோரி  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்று (14.06.2024) குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்துக் கொண்ட பின்னர் நகர சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனப்படுகொலையை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்கக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதிய அட்டைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதன்போது குருநாகல் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன், சமுகப்பணியாளர் நஸார் ஹாஜியார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் முன்னெடுப்புக்களால் காசாவில் உள்ள பொது மக்கள் துயரங்களை அனுபவித்துக்கொண்டு வருகின்றனர். அவற்றைத் தடுத்து அவர்களுக்கான தீர்வாக சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.

சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஏன் போர்க்கொடி..! சஜித் கேள்வி

எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது ஏன் பிரச்சினைகள் வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வியெழுப்பியுள்ளார். எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம், கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன? நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது. ஆகவே, சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர். அதேபோன்றே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர். அவ்வாறே முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும். எனவே, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனூடாகவே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதுவே மிக முக்கியமான விடயமாக உள்ளது. கமராக்களுக்காக அதனை ஏற்படுத்தாமல் மனதளவில் அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சிக்கிய இளைஞன்…!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் கிரந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டு வைத்திருப்பதாக கிரந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.