Search
Close this search box.
குருநாகலில் முஸ்லிம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

குருநாகல் (Kurunagala) முஸ்லிம் மக்களினால் காசாவில் நடைபெற்று வரும் போரினை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க கோரி  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது நேற்று (14.06.2024) குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்துக் கொண்ட பின்னர் நகர சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனப்படுகொலையை நிறுத்தி சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்கக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதிய அட்டைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது குருநாகல் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன், சமுகப்பணியாளர் நஸார் ஹாஜியார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் முன்னெடுப்புக்களால் காசாவில் உள்ள பொது மக்கள் துயரங்களை அனுபவித்துக்கொண்டு வருகின்றனர்.

அவற்றைத் தடுத்து அவர்களுக்கான தீர்வாக சுதந்திர பாலஸ்தீனத்தை வழங்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.

Sharing is caring

More News