Search
Close this search box.
செஞ்சோலை காணியை உாிமையாளா்களுக்கு வழங்குவதில் சிக்கல்!

செஞ்சோலை மற்றும் அறிவுச்சோலைக்கு சொந்தமான காணிகளை உரியமையாளர்களிடம் கைளிப்பதில் சிக்கல் நிலை காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

கடற்தொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேயே இவ்வாறு கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறிப்பாக விடுதலைப்புலிகளிடமிருந்த காணிகள் உரிமையாளர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்தன.

முறையான உறுதிப்பத்திரங்கள் உள்ள உரிமையாளர்களுக்கு மீண்டும் அதனை வழங்கியிருந்தாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

செஞ்சோலையிலுள்ள பிள்ளைகளின் நலன்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.

செஞ்சோலைக் காணிகளை உரிமையாளரிடம் கையளிப்பது சமூகம் சார்ந்த பிரச்சனை என தெரிவிக்கப்பட்ட போது அது உரிமை சார்ந்த விடயம் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மலையாளபுரம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் உறவுகளை இழந்த பிள்ளைகள் தற்போது கொட்டகை அமைத்து வாழந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாகவும் அதீத கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

செஞ்சோலை காணி விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாகவும் ஆனால் அதற்குள் மலசலகூடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் குறிப்பிட்டார்.

ஆனால் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்டிருந்த ஏனயை காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ள நிலையில் செஞ்சோலைக் காணிகளையும் உரிமையாளரிடம் வழங்குவதே நியாயமானது என்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் குறிப்பிட்டார்.

எனினும் செஞ்சோலையில் வளர்ந்த பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் நிலைமைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.

Sharing is caring

More News