பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று, இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்ளிட்ட பல முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.