மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.
ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.