நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மே 9 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
போராட்டத்தை விட அதனை முன்னெடுத்தவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சொத்துக்கள் வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.
இந்த நாட்டில் சுயலாப தேவைக்காக ஜனாநாயக உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.
நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடுபவர்களிடம் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என நாமல் தெரிவித்துள்ளார்.