Search
Close this search box.
முல்லைத்தீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றையதினம்(08) கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News