புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (06) தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபத்தில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று சீதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானது.
இதனால், புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.