யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே தலைமறைவாக இருந்த போது சந்தேகநபர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கைதான சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.