Search
Close this search box.
உலகளாவிய ரீதியாக முடங்கிய மைக்ரோசொஃப்ட் கணினிகள்
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன.

விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன.

லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Sharing is caring

More News