நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமையை மாற்றுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்த விலைமனு கோரும் நடவடிக்கையை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவு, ஜூலை 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.
இந்த ஏல முறைக்குப் பதிலாக மாற்று முறையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.