Search
Close this search box.
முள்ளிவாய்க்காலில் இரு வீடுகள் உடைத்து திருட்டு சம்பவம்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று (18.07.2024)அதிகாலை இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

திருடர்கள் 1/2 பவுண் தோடு மற்றும் 170,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டாருக்கு காலை எழுந்தபின்னரே  திருடப்பட்ட சம்பவம் தெரியவந்ததுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதற்கமைய சந்தேகத்தின் பேரில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த திருட்டு சம்பவம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring

More News