Search
Close this search box.
வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
Sharing is caring

More News