Search
Close this search box.
கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள சலுகை

நாட்டில் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு விசேட சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினால் நிறுவப்படும் அரசாங்கத்தில் கறுப்பு பணத்தை முதலீடு செய்வதற்காக விசேட நிதியம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சேர்க்கப்படாத பணம் மக்களிடம் உள்ளதாக, அவ்வாறான பணம் கறுப்புப் பணமாகக் கூட இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கறுப்பு பணத்தை அரசாங்க செயற்திட்ட நிதியத்திற்கு இந்தப் பணத்தை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் எந்தவொரு நபரும் முதலீடு செய்யக்கூடிய வகையில் இந்த நிதியம் உருவாக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring

More News