அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்கும் காலம் கடந்த 13ம் திகதியுடன் முடிவடைந்தது.
இரண்டாம் கட்டமாக 75,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அஸ்வெசும நலன்புரி சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் கணக்கிடப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 34 இலட்சம் ஆகும், அதில் 18 இலட்சம் பேர் அஸ்வெசுமவின் பலன்களுக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.