Search
Close this search box.
திருமணம் செய்து இஸ்ரேலுக்கு செல்லவிருந்த இளம் தாதி எடுத்த விபரீத முடிவு

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த – அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பஹ்வவத்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன்,

பிரேத பரிசோதனை நேற்று  வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

Sharing is caring

More News