Search
Close this search box.
கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் புதிய மாற்றம்! வெளியான அறிவிப்பு…

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய முறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sharing is caring

More News