அரபிக்கடலில் எரிபொருள் கப்பல் விபத்திற்குள்ளாகிய பின்னர் அதன் பணியாளர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள் எனவும் ஏனைய மூவர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் இந்த எரிபொருள் கப்பல் கவிழ்ந்துள்ளது.