Search
Close this search box.
பாதாளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள்- பொலிஸார் தீவிரவிசாரணை

பாதளஉலகத்துடன் தொடர்புபட்ட அச்சுறுத்தும் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துருகிரிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட பின்னர் தெமட்டகொட மகரஹம பகுதிகளில் காணப்பட்ட மர்மசுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளப்வசந்தவின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்ற தினத்தன்று பாதளஉலகத்தலைவர் மதுஸின் உடல் புதைக்கப்பட்ட கொடிகமுவ மயானத்தில் பாதளஉலகத்தினரால்  ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன.

மதுஸின் படத்துடன் காணப்பட்ட சுவரொட்டிகளில்   அன்புக்குரிய சகோதரரே நாங்கள் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்,எங்களுக்காக காத்திருங்கள் என்ற வாசகங்கள் காணப்பட்டுள்ளன.

மதுசுடன் உறவிலிருந்து பெண்ணொருவர் கிளப்வசந்த கொல்லப்பட்ட தினத்தன்று மதுசின் கல்லறைக்கு சென்று மெழுகுதிரி ஏற்றியுள்ளார்.

2012 வெலிக்கடைசிறைச்சாலை வன்முறையில் கொல்லப்பட்ட களுதுசாரவின் மனைவியான இவர் பின்னர் மதுசுடன் துபாயில் வாழ்ந்துள்ளார்.

மேலும் இந்த பெண் வசிக்கும் பகுதியில் ( மஹரஹம) மதுஸ் சென்ற இடத்திற்கு பாதளஉலகத்தை சேர்ந்த அனைவரும் செல்வதற்கு தயாராக உள்ளனர் , கஞ்சிப்பானை குடும்பத்திற்கும் இதே தண்டனை போன்ற சுவரொட்டிகளும் காணப்பட்டுள்ளன.

ஹிருசெவன தொடர்மாடி மற்றும் தெமட்டகொடயில் இவ்வாறான சுவரொட்டிகள் காணப்பட்டுள்ளன.

Sharing is caring

More News