உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன் மீதி பணத்தை செலுத்தி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, மீதி பணத்தை செலுத்தி முடிக்க 6 வருடகால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி மூலம் உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.