Search
Close this search box.
முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள்  பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன்  நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில்  கலந்துரையாடினர்.

 

Sharing is caring

More News