ரம்புக்கணை புவக்மோட்டையிலுள்ள விகாரையை உடைத்து பெறுமதியான புத்தர் சிலையைத் திருடிய தேரர் உட்பட மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களால் திருடப்பட்ட பெறுமதியான புத்தர் சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.