Search
Close this search box.
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அழைப்பு.

ஜனாதிபதி வேட்பாளராக முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் குழப்பமான, கடினமான மற்றும் கசப்பான நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சவாலை ஏற்றுக்கொண்டார்.சுதந்திர  இலங்கையில், இத்தனை பிரச்சினைகள் மத்தியில் நாட்டை கையில் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

ஜனாதிபதியாக பதவி ஏற்கும் முன்னரே அவரது வீடு எரிக்கப்பட்டது, ஜனாதிபதி செயலகம் கையகப்படுத்தப்பட்டது, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பன கையகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்டு, இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.இதன்போது ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் படிப்படியாக அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டி ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலிருந்து மக்களை விடுவிக்கவும் பாடுபட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த பிறகு, நாங்கள் எங்கள் வேட்பாளரை முன்வைக்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த தேர்தலில் போட்டியிடுமாறு பணிவுடன் அழைக்கின்றோம்.

இந்த நாடு மிகக் குறுகிய காலத்தில் கட்டியெழுப்பப்பட்டது போலவே, இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த சில வருடங்களை எடுத்துக்கொள்வதற்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் அவருக்கு வழங்க நாமும் எம்மை அர்ப்பணிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News