Search
Close this search box.
ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து தரப்புக்களையும் ஜனாதிபதி தற்போதும் தன்வசம் வைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற ரோஹித அபேகுணவர்தனவின் பேரணியில் ஜனாதிபதி கலந்துகொண்டமைக்கு நிமல் லான்சா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். .

இந்நிலையில் ரோஹித் அபேவர்த்தனவின் பேரணி, லங்சா அணியின் செல்வாக்கை மிஞ்சும் வகையில் அமைந்திருந்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து லங்கா அணி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் அதன் இருப்பு குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sharing is caring

More News