Search
Close this search box.
பேருந்தில் பயணித்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் – பூநகரி 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஏறியுள்ளார்.

இதன்போது பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவால் கீழே விழுந்துள்ளார்.

சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring

More News