பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில் இன்று (12) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டுகளில் இருந்து இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.