Search
Close this search box.
யாழில் யுவதி கடத்தலில் சிக்கிய மூவர்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் நின்றவர்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

அதற்கிடையில் கடத்தி சென்ற யுவதியை ஊர்காவற்துறை பிறிதொரு பகுதியில் வீதியில் இறக்கி விட்டு, கடத்தி சென்ற நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இருந்த போதிலும் பொலிஸாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து , யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring

More News