கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடியம்பலம பகுதியில் விசா இன்றி தங்கியிருந்த 6 இந்தியர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,000 சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட்டு கார்ட்டுன்களுடன் இந்திய பிரஜை ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.