பணிபுரியும்போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவருரை மற்றொரு கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், பொலிஸ் அதிகாரிக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.