ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 19ஆவது திருத்தத்தை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.