Search
Close this search box.
பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலக உறுப்பினர்கள்.

இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து டுபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் “பாபி” மற்றும் 26 வயதான கங்கனம்ல திமுத்து சதுரங்க பெரேரா ஆகியோரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 05.10 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கங்கனம்லவின் திமுத்து சதுரங்க பெரேரா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டி  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring

More News