அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வொஷிங்டனில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகப் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் அவர் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த விடயம் தொடர்பில் தங்களது சந்திப்பின் போது கலந்துரையாடப்படவில்லை என பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.