Search
Close this search box.
ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே!

பாராளுமன்றத்தில் நேற்று (10)  சித்த மருத்துவ பட்டப்பிப்பினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு மாகாணத்தினுள்ளே தற்காலிக பணியிலாவது அமர்த்தவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தபோது அமைச்சர்  அடுத்த கிழமை அதற்கான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் 25,000 ரூபாய் வெகுமதி (Bonus) கொடுப்பதற்கு இணங்கி உள்ளனர். ஆனால் கிராம உத்தியோகஸ்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு தற்போது ரூ. 600 மாத்திரமே வழங்கப்படுவதுடன், ஒரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்காக தற்போது ரூ. 3,000 மாத்திரமே வழங்கப்படுகிறது.

இதனை ரூ. 4,000 அல்லது ரூ. 6,000 வரை அதிகரிக்குமாறும், வருடத்திற்கு சீருடைக்காக ரூ. 5,000 உம், அலுவலக உபகரணங்களுக்காக ரூ. 1,500 உம் வழங்கப்படுகிறது. எனவே, இவற்றுக்கான பணத்தொகையை அதிகரித்து தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை கிராமசேவகர் உத்தியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது நாட்டில் IMF ஒப்பந்தம் அல்ல; எது வந்தாலும் அரசியல் இஸ்திரத்தன்மை வந்தால் மாத்திரமே முதலீடுகள் வந்து சேரும். உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது நாட்டில் இஸ்திரத்தன்மை இல்லை என்பதை உணர முடிகிறது.

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மொத்தமாக 110,000 பேர் உள்ளனர். அதில் 90,000 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர். மிகுதியாக உள்ள 20,000 பேருக்கு சான்றிதழும், விசேட கொடுப்பனவும் ஜனாதிபதியினால் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இம் முயற்சியை விடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவர்கள் சம்பளத்தில் மேலதிகமாக ரூ. 2,000 மாத்திரமே கேட்கின்றனர். இவர்கள் அநீதியான முறையில் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அத்துடன் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரித்ததால் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. இதன் பொருட்டே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நியாயமான கோரிக்கையினையே இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர். இதனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி விசேட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sharing is caring

More News