Search
Close this search box.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று,

யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring

More News